18th May 2026
மேஜர் ஜெனரல் எம்.என். பெர்னாண்டோ ஆர்எஸ்பீ அவர்கள் கரந்தெனிய இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் 2026 மே 15 ஆம் திகதி இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதியாக் கடமை பொறுப்பேற்றார்.
அவருக்கு, பாதுகாவலர் அநிக்கையிடல் மரியாதையும், அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அவ்விடத்தில் ஒரு மரக்கன்றை நட்டியதுடன், படையணியின் படையினருக்கு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அவர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.