23 வது காலாட் படைப்ப்பிரிவின் மின்சார வாகன மின்னேற்றும் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

பசுமைப் போக்குவரத்து மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, 23வது காலாட் படைப்பிரிவு 2026 மே 13 ஆம் திகதி மின்சார வாகன மின்னேற்றும் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்தது.

வளர்ந்து வரும் மின்சார வாகன சமூகத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மின்சார வாகன மின்னேற்ற மையம் நிறுவப்பட்டது. இந்த நவீன மின்னேற்ற நிலையம், இப்பகுதி வழியாகப் பயணிக்கும் மின்சார வாகனப் பயனர்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான மின்னேற்ற சேவைகளை வழங்குவதையும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தீர்வுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பீ.பீ. குலதிலக்க என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.