இந்திய பிரதிநிதிகள் குழு இலங்கை சமிக்ஞை பாடசாலைக்கு விஜயம்

இந்திய இராணுவப் புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.கே. சிங் எஸ்எம் அவர்களின் தலைமையில் இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 2026 மே 15 ஆம் திகதி சமிக்ஞை பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டது.

பாடசாலையின் தளபதி கேணல் டி.எம்.எஸ். திசாநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் தூதுக்குழுவினர் வரவேற்கப்பட்டனர். அத்துடன், பயிற்சி நடவடிக்கைகள் குறித்த விளக்கமளிக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. மேலும், 2018-ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட தகவல் தொடர்பு ஆய்வக வளாகத்தையும் தூதுக்குழுவினர் பார்வையிட்டனர். அதிகாரிகள் விடுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது சுமுகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் இந்த விஜயம் நிறைவடைந்தது.