17th May 2026
தென் சூடானின் அயோத் நகரில் எத்தியோப்பிய அமைதிப்படையினருக்கு ஏற்பட்ட ஒரு அவசர சூழ்நிலையைத் தொடர்ந்து, தென் சூடானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழுவின் கீழ், தென் சூடானின் போர் நகரில் உள்ள இலங்கை இராணுவ வைத்திய படையின் நிலை 2 வைத்தியசாலை, 2026 மார்ச் 24 ஆம் திகதி காயமடைந்தோரை வெளியேற்றும் ஒரு சவாலான பணியை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது.
ரோந்துப் பணியின்போது தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட ஐந்து பேரை மீட்பதற்காக, வான்வழி மருத்துவ மீட்புக் குழு சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட வீரர்களில் இருவர், தீவிர ஒவ்வாமையினால் அவதிப்பட்டு வந்தனர், மேலும் அவர்களுக்கு அனாபிலாக்ஸிஸ் ஏற்படும் அபாயம் இருந்தது.
இக்கட்டான செயற்பாட்டுச் சூழல்களுக்கு மத்தியிலும், குழுவினர் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளித்து, விமானப் பயணத்தின்போதும் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஸ்ரீமெட் நிலை 2 மருத்துவமனைக்கு மாற்றினர்.