17th May 2026
தென் சூடான் போர் பிரதேசத்திலுள்ள இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலை, 2026 ஏப்ரல் 25 ஆம் திகதி தென் சூடான் ஐக்கிய நாடுகள் சபை தூதுக்குழுவின் பல நாட்டு உறுப்பினர்களுடன் இணைந்து, அங்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
எத்தியோப்பியா, இந்தியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் படைப்பிரிவுத் தளபதிகளும், ஐ.நா. அதிகாரிகளும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். பாரம்பரிய இலங்கை புத்தாண்டு சம்பிரதாயங்கள், கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் 'புத்தாண்டு' தேநீர் மேசை ஆகியவை அந்த நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டின.