17th May 2026
ரணவிரு சேவா அதிகாரபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண போர் வீரர்கள் நினைவு விழா, தேசிய நினைவு தினதிற்கு இணையாக, 2026 மே 14 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்றது.
வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் சார்பில் அணிவகுப்பு நடாத்தப்பட்டதுடன், தொடர்ந்து மலர் வலயம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அரச பிரதிநிதிகள் மற்றும் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு, நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.