ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மே 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் 1991 ஏப்ரல் 29 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 03 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் மற்றும் தியத்தலாவ பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் தனது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1992 ஏப்ரல் 14 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை விஜயபாகு படையணியில் பணியமர்த்தப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 நவம்பர் 22 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மே 17 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும் போது நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படைத் தளபதியாகப் பதவி வகிக்கின்றார்.

தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 4 வது விஜயபாகு காலாட் படையணி குழு தளபதி, 1 வது விஷேட படையணி குழு தளபதி, 2 வது விஷேட படையணி குழு தளபதி, 3 வது விஷேட படையணி அதிகாரி கட்டளை, காலாட் பயிற்சி மைய அதிகாரி பயிற்றுவிப்பாளர், 1 வது விஜயபாகு காலாட் படையணி செயற்பாடு மற்றும் பயிற்சி அதிகாரி, 11 வது விஜயபாகு காலாட் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை குழு பணிநிலை அதிகாரி, 23 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளர் கிளை பணிநிலை அதிகாரி 1 (தொண்டர்), இராணுவ பயிற்சி பாடசாலை ஆட்சேர்ப்பு பயிற்சி பிரிவு கட்டளை அதிகாரி, இராணுவ பயிற்சி பாடசாலை பதில் தளபதி, இராணுவ தலைமையகத்தின் பணிநிலை கடமைகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1, மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கேணல் (பொதுப்பணி), மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் பதில் பிரிகேடியர் (பொதுப்பணி), இலங்கை இராணுவ தொண்டர் படையணி கேணல் இராணுவ செயலாளர் (தொண்டர்) மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பிரதி தளபதியாக பணியாற்றியுள்ளார்.

மேலும் அவர், இராணுவ செயலாளர் கிளை உதவி இராணுவச் செயலாளர் 3 மற்றும் உதவி இராணுவச் செயலாளர் 2, இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பக பணிப்பாளர், பயிற்சி பணிப்பக பணிப்பாளர் நாயகம், நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படைத்தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேற்கூறிய நியமனங்களைத் தவிர, அவர் காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட் மட்டங்களில் பிரிகேட் மேஜர், பிரிகேட் தளபதி, மற்றும் படைப்பிரிவு தளபதி போன்ற பல்வேறு கடமைகளை வகித்துள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண விக்கரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அதிகாரி, இளம் அதிகாரிகள் பயிற்சி, அடிப்படை விஷேட படையணி பயிற்சி, கனிஷ்ட கட்டளைப் பயிற்சி, அடிப்படை பரசூட் பயிற்சி,இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி மற்றும் தேசியப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் பயிற்சி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அவரது வெளிநாட்டுப் பயிற்சிகளில், கமாண்டோ பயிற்சி இந்தியா, இளம் அதிகாரிகள் தந்திரோபாயப் பயிற்சி பாடநெறி பாகிஸ்தான், இந்தியாவில் கனிஷ்ட கட்டளை மற்றும் ஆஸ்திரேலியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிசார் இராணுவ நிபுணர் பாடநெறி ஆகியவை அடங்கும்.

தனது இராணுவத் தகுதிகளுக்கு மேலாக, சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இருந்து தேசியப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுநிலை அறிவியல் பட்டத்தையும், பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திரப் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெற்ற ராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்கள் கற்கையையும் நிறைவுசெய்துள்ளார்.