இசிபத்தன கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான பாராட்டு விழா மற்றும் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்கேற்பு

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 14 அன்று இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா - 2026 ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இசிபத்தன கல்லூரி, இராணுவ பதவி நிலை பிரதானியின் கல்வி பயின்ற தளமாவதுடன் அவரது குணநலனையும் தலைமைப் பயணத்தையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்து, அவர் இன்று இருக்கும் நிலைக்கு அடித்தளமிட்ட நிறுவனம் இதுவாகும்.

வருகை தந்த பிரதி பதவி நிலை பிரதானி அவர்களுக்கு இசிபத்தன கல்லூரி அதிபர் திரு. தர்ஷன உடவத்தகே அவர்களால் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து, கல்லூரி நடனக் குழுவினர் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பாடசாலை மாணவ சிப்பாய் படையணியினர் பிரதி பதவி நிலை பிரதானிக்கு மரியாதை அணிவகுப்பு நடத்திக் கௌரவித்தனர்.

பின்னர், மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழாவில் பிரதி பதவி நிலை பிரதானி கலந்து கொண்டு சிறப்பித்துடன் அதனைத் தொடர்ந்து, கல்லூரி நடனக் குழு மற்றும் கலாசாரக் குழுவினரால் அவருக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய மங்கல விளக்கேற்றுதல், தேசிய கீதம் பாடுதல் ஆகியவற்றுடன் விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சமயச் சடங்குகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதி பதவி நிலை பிரதானி மாணவர்களுக்கு உரையாற்றி, ஒரு கல்லூரி மாணவ தலைவரின் பங்கு மற்றும் தலைமைப் பண்புகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும், கல்வி, அணிவகுப்புப் பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்க தொடர்ந்து முற்சிக்குமாறு அனைத்து மாணவர்களையும் அவர் ஊக்குவித்தார். உரையின் நிறைவில், இசிபத்தன கல்லூரியின் சார்பாக இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியாக, தன்னை பிரதம விருந்தினராக அழைத்ததற்காக அதிபர், தலைவர், பழைய மாணவர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள், தலைமை மாணவர் தலைவர் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மதகுருக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.