11th May 2026
டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் தொழிநுட்ப வல்லுநர்களுக்கான இரண்டு நாள் தொழில்நுட்பப் பயிலரங்கம் ஒன்று மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 மே 07 மற்றும் 08 ஆகிய திகதிளில் வத்தளையில் உள்ள டொயோட்டா லங்கா (தனியார்) லிமிடெட் நிறுவனத்தில் நடத்தப்பட்டது.
இந்தத் திட்டம், பங்கேற்பாளர்களுக்கு மின்னணு எரிபொருள் உந்து அமைப்புகள், ஓபிடி ஸ்கேனிங் கருவிகளைப் பயன்படுத்தி வாகனப் பழுது கண்டறிதல், வாகனப் பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் காமன் ரயில் எரிபொருள் உந்து அமைப்புகள் உள்ளிட்ட நவீன வாகன அமைப்புகள் குறித்த நடைமுறை மற்றும் கோட்பாட்டு அறிவை வழங்கியது.
இந்தப் பயிலரங்கமானது, விரிவுரை மற்றும் செயன்முறை விளக்கங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட பயிலரங்கு விஜயங்களுடன் இணைத்து, பங்கேற்ற மின்சார மற்றும் இயந்திர பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தியதுடன் நவீன வாகனப் பராமரிப்பு மற்றும் பழுது கண்டறியும் நடைமுறைகள் குறித்த அவர்களின் அறிவையும் புதுப்பித்தது.