பொதுநலவாய இளைஞர்/கனிஷ்ட சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் கிண்ண போட்டிகளில் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

பொதுநலவாய இளைஞர்/கனிஷ்ட சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் கிண்ண போட்டிகள் 25 ஏப்ரல் 2026 முதல் 02 மே 2026 வரை சமோவா அப்பியாவில் நடைபெற்றன. இப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சிப்பாய் ஆர்.எல்.எஸ்.ஆர். லக்சரணி 53 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், 15 வது இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் ஆர்.டபிள்யூ.எம். ரஷ்மிதா 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.