8th May 2026
4 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் திருகோணமலை, கின்னியாவில், இலங்கை கவச வாகன படையணி சிவில் பணியாளரான திரு. ஏ.கே. தம்யித் அவர்களுக்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவச வாகன படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்கள், 27 ஏப்ரல் 2026 அன்று புதிதாகக் கட்டப்பட்ட வீட்டைப் பயனாளியிடம் ஒப்படைத்தார்.
இந் நிகழ்வின்போது, இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அக்குடும்பம் தங்களது புதிய வீட்டில் குடிபுகுவதற்கான ஆதரவாக அத்தியாவசிய வீட்டு உபகரணங்களை வழங்கினார்.
இத் திட்டத்திற்கான நிதி நன்கொடைகளை பிரிகேடியர் எம்.ஏ. இஸதீன் (ஓய்வு) ஆர்எஸ்பீ மற்றும் திரு. ரியாஸ் உசூப் ஆகியோர் வழங்கினர்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.