2025/2026 இலங்கை கிரிக்கெட் பி தொடரில் இராணுவ கிரிக்கெட் வீரருக்கு மதிப்புமிக்க வீரர் பட்டம்

2025/2026 இலங்கை கிரிக்கெட் பி மூன்றாண்டுத் தொடர் 15 நவம்பர் 2025 முதல் 17 பெப்ரவரி 2026 வரை நடைபெற்றது. இராணுவ கிரிக்கெட் கழகம் மற்றும் கடற்படை கிரிக்கெட் கழகம் உட்பட பன்னிரண்டு முக்கிய கழகங்கள் இத்தொடரில் போட்டியிட்டன.

இராணுவ கிரிக்கெட் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் டபிள்யூ.எச்.எஸ்.என். சொய்சா அவர்கள் இத்தொடரின் தலைசிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார். அவர் 11 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 641 ஆட்டத்தை பெற்றதுடன் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவரது மிகச்சிறந்த சகலத்துறை ஆட்டத்திறனை அங்கீகரிக்கும் விதமாக, இலங்கை கிரிக்கெட் அவரை இத்தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரராக அறிவித்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.