23rd April 2026
பதுளை போதனா வைத்தியசாலையின் தேசிய இரத்தமாற்று சேவையின் வேண்டுகோளுக்கிங்க, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 2026 ஏப்ரல் 22 அன்று தியத்தலாவ இராணுவ தள வைத்தியசாலையில் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.