19th April 2026
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து அன்புடன் வரவேற்றார்.
இவ்விழாவில் சிங்கள மற்றும் தமிழ் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகளும் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றதுடன், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் பண்பாட்டு அம்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இராணுவத் தளபதி “கெமி கெதர”வில் நடைபெற்ற வழக்கமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி மற்றும் புத்தாண்டு அழகுராணி தேர்வு உள்ளிட்ட முக்கியப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இராணுவத் தளபதி விருதுகளையும் பரிசில்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.