16th April 2026
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஹைட்டி கும்பல் அடக்கும் படை ஆரம்ப பாடநெறி அமர்வு 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவடைந்தது.
2026 பெப்ரவரி 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடநெறி, மூன்று கட்டங்களாக நடாத்தப்பட்டது. இந்தப் பாடநெறியின் பாடத்திட்டம் இரண்டு முக்கிய விடயங்களை கொண்டிருந்தது. மேலும், கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலை மற்றும் விஷேட படையணி பயிற்சிப் பாடசாலையில் தனிப்பட்ட திறன் மேம்பாட்டுத் தொகுப்பு ஒன்றும் நடாத்தப்பட்டது.
சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் இலங்கை அமைதி காக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார்.