2024/2025 பாதுகாப்பு சேவைகள் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இராணுவ படையினரின் சாதனைகள்

13 வது பாதுகாப்பு சேவைகள் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஜனவரி 09 ஆம் திகதி கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள தேசிய பளுதூக்குதல் நிலையத்தில் நிறைவடைந்தது.

கொமடோர் ஆர் திசாநாயக்க அவர்கள் நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இராணுவ விளையாட்டுக் கழக ஆண்கள் அணி அனைத்திலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிப்பாய் கே.சி.ஏ.எஸ்.டி. ஜயவர்தன தனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த பளுதூக்குபவருக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் பளுதூக்குதல் அணிகள் இரண்டும் அந்தந்த பிரிவுகளில் வெற்றி பெற்றன.