15th April 2026
கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் – 109 இன் விடுகை அணிவகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ். டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் வெவ்வேறு படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 54 அதிகாரவாணையற்ற அதிகாரிகள், 3 மாத காலப் பயிற்சியை வெற்றிகரமாகப் பின்பற்றினர்.
2 வது கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.பீ.ஜே.என். பத்திரன பயிற்சியின் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.
கட்டளை அதிகாரி, தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.