இலங்கை பொறியியல் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள், இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளுக்கு இணங்க, 2026 ஏப்ரல் 04 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் இலங்கை பொறியியல் படையணியின் 25 வது படைத் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய படையணியின் படைத் தளபதி, நிலைய தளபதி கேணல் என்.கே.பி.எஸ். ஜயசேகர அவர்களினால் பிரதான நுழைவாயிலில் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் நினைவுத்தூபியில் ஒரு புனிதமான செயலாக, படையணியின் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவர் மலர்வளையம் வைத்தார். அதனைத் தொடர்ந்து, அணிவகுப்பு மைதானத்தில் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.

சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நடைபெற்ற விழாவின் போது முறைப்படி பதவியேற்பு நடைபெற்றது. அவ்விழாவில், படையணியின் படைத் தளபதி தனது புதிய பொறுப்புக்களை ஏற்கும் வகையில் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொழுத்திட்டார்.

சம்பிரதாய நிகழ்வுகளின் பின்னர், படையணியின் வரலாற்றில் இந்த முக்கிய மைல்கல்லை நினைவுகூரும் வகையில், படையணியின் பணியாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துதக்கொண்டனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் படையினரிடையே தோழமையையும் நல்லுறவையும் வளர்க்கும் வகையில் அனைத்துத் நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது.

அன்றைய நிகழ்வுகள் படையினருக்கான உரையுடன் நிறைவடைந்தன. அதில் அவர், படையணியின் எதிர்காலம் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.