சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பாடநெறி எண் – 59 நிறைவு

அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பாடநெறி எண் – 59, சான்றிதழ் வழங்கும் விழாவுடன் 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி நிறைவடைந்தது.

போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஏ.கே.சி.எஸ். டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் நிறைவுரை ஆற்றினார். மொத்தம் 41 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

5வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சார்ஜன் ஆர்.பீ.ஆர்.பீ. விஜேதுங்க அவர்கள் பாடநெறியின் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர் சிப்பாய்கள் விழாவில் கலந்துகொண்டனர்.