9th April 2026
கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுத் தலைவி திருமதி அஞ்சலிக் அப்பேரூக்ஸ் அவர்கள் 2026 ஏப்ரல் 08 அன்று யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தலைவி, யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். சந்திப்பின் போது இரு தரப்பினரும் பொதுவான விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
விஜயத்தின் முடிவில், அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுப் சின்னங்கள் பரிமாறிகொள்ளப்பட்டன. மேலும் அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.