6th April 2026
மேஜர் ஜெனரல் கே.டீ.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 04 ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 19 வது தளபதியாக கடமை பெறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு இலங்கை இராணுவ சேவை படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் கௌரவ அணிவகுப்பும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் அலுவலக வளாகத்தில் ஓர் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றதை அடையாளப்பூர்வமாகக் ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தளபதி வளாகத்தில் ஒரு மரக்கன்றை நாட்டியதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து குழு படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
கூட்டத்தில் உரையாற்றிய தளபதி, படைவீரர்களிடையே வலுவான நேரடித் தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இணையவழி உறவுகளைக் காட்டிலும் பரஸ்பர ஆதரவின் மதிப்பையும் எடுத்துரைத்தார். ‘தூய இலங்கை’ மற்றும் ‘ரடம ஏகட’ திட்டங்கள் போன்ற தேசிய முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதில் இலங்கை இராணுவத்தின் பங்கு குறித்தும் அவர் மேலும் விரிவாக விளக்கினார். தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டு, பொதுவான நோக்கங்களை அடைவதற்காக அனைத்துத் நிலையினரும் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.