வெளிச்செல்லும் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு இராணுவ மரியாதை

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு, 2026 ஏப்ரல் 03 அன்று, யாழ். பாதுகாப்புப் படைகள் சார்பில் இராணுவ சாம்பிரதாய விழா ஒன்றில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

வருகை தந்த தளபதி பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் எம்.எச்.ஆர். பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 5 வது இலங்கை சேவை படையணி படையினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.