4th April 2026
மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61வது தளபதியாக தனது பதவிக்காலத்தை 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி நிறைவு செய்தார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், வீரமரணமடைந்த அனைத்துப் போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கெப்டன் சாலிய அலதெனிய அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் தனது கடமைகளை சம்பிரதாயமாக கையளித்து, தளபதியின் அலுவலகத்தில் தனது புகைப்படத்தை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வின் நினைவாக வெளிச்செல்லும் தளபதி ஒரு குழுப்படம் எடுத்துகொள்வதற்காக அழைக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, அவர் பல முக்கிய வசதிகளைக் கொண்ட பனோரமிக் வியூ, புதிய தளபதி விடுதி மற்றும் கிரீன்வியூ சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், அவர் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
அனைத்துத் நிலையினருக்கும் ஆற்றிய தனது உரையின் போது, உண்மையான மாற்றம் உள்ளிருந்தே தொடங்குகிறது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், கடமைக்கும் தனிப்பட்ட நலனுக்கும் இடையே சமநிலையைப் பேணிக்கொண்டு, வலுவான விழுமியங்களைக் கடைப்பிடிக்குமாறு வீரர்களை அவர் ஊக்குவித்தார். தொடர்ந்து வழிகாட்டியும் ஆதரவளித்தும் வரும் இலங்கை ஜனாதிபதிக்கும் இராணுவத் தளபதிக்கும் அவர் நன்றி தெரிவித்ததோடு, அனைத்துத் நிலையினரும் தங்களின் எதிர்கால முயற்சிகளில் வலிமையையும் வெற்றியையும் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.