இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

கஜபா படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 62 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கொஸ்கம தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அத்துடன் புதிதாக கடமை பொறுப்பேற்ற தளபதி மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய அவர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் குழுப்படம் எடுத்துக்கொண்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் மரக்கன்றினையும் நாட்டினார்.

தளபதி தனது முதல் உரையில், தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்ததோடு, தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக அனைத்து நிலையினருக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், மூன்று தசாப்த கால போரின் போது வீரமரணம் அடைந்த மற்றும் காயமடைந்த தொண்டர் படை போர் வீரர்களின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, அவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

தொண்டர் படையணியின் பெருமைமிக்க 145 ஆண்டுகால பாரம்பரியத்தை எடுத்துரைத்த அவர், படையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் திறம்பட்ட செயல்பாட்டிற்கும் ஒழுக்கம், அறிவு மற்றும் செயல்திறன் ஆகியவை முக்கியத் தூண்கள் என்பதை வலியுறுத்தினார்.

அன்றைய நிகழ்வுகள் தேநீர் விருந்துடன் நிறைவடைந்துடன் அந் நிகழ்வு தளபதிக்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.