3rd April 2026
போர் பயிற்சிப் பாடசாலையில் நடத்தப்பட்ட 85-வது கற்பித்தல் முறைமைப் பாடநெறி 2026 மார்ச் 31 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 144 மாணவர்கள் போர் பயிற்சிப் பாடசாலையில் ஒரு மாத காலம் தங்கியிருந்து நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டனர்.
4வது இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் டி.எம்.என். பண்டார, பாடநெறியின் சிறந்த மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போர் பயிற்சிப் பாடசாலையில் தளபதி பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ். டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள், சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, நிறைவுரையாற்றினார்.
கட்டளை அதிகாரி, தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.