பசுமை கட்டிட விருதுகளில் 14 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விருது

இலங்கையின் பசுமைக் கட்டிட சபை ஏற்பாடு செய்திருந்த 13 வது வருடாந்த பசுமைக் கட்டிட விருது வழங்கும் விழா 19 டிசம்பர் 2024 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கையின் பசுமைக் கட்டிட சபையில், நிபுணத்துவப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தத 14 பொறியியல் சேவைகள் படையணியை சேர்ந்த அதிகாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் இந்த சாதனை மூலம் இலங்கையின் பசுமைக் கட்டிட சபையின் நிபுணர்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.