அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிறைவு

அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண் 13 மற்றும் இடைநிலை உயிர்காக்கும் பாடநெறி எண். 06 கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 26 டிசம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

நிறைவு விழாவில் இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலைய தளபதி கேணல் ஆர்எம்எச்பீகே ரத்நாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிறைவுரையாற்றியதுடன் பாடநெறி முழுவதும் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்புக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இப் பயிற்சியில் மொத்தம் 10 அதிகாரிகளும் 191 சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.

பின்வரும் பங்கேற்பாளர்கள் தங்கள் சிறந்த சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.

• அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண். 13:

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கெப்டன் டிகேடிஎஸ் நிராஜ்

• இடைநிலை உயிர்காக்கும் பாடநெறி எண். 06:

கெமுனு ஹேவா படையணியின் கெப்டன் ஆர்கேஏஎஸ்என் ரணசிங்க