ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்:

மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 1990 ஜனவரி 09 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1991 ஜூன் 15 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பொறியியல் படையணியில் பணியமர்த்தப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2023 மே 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரி 2026 ஏப்ரல் 03 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும்பொழுது இராணுவ பதவி நிலை பிரதானியாகவும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.

தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 6 வது கள பொறியியல் படையணி குழு தளபதி, 6 வது கள பொறியியல் படையணி நிறைவேற்று அதிகாரி மற்றும் அதிகாரி கட்டளை, இராணுவ கல்வியற் கல்லூரியின் பொதுப்பணிநிலை அதிகாரி 2 ( இராணுவ பயிற்சி), யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப்பணிநிலை அதிகாரி 2 (செயற்பாடுகள் மற்றும் பயிற்சி), இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 2 (வெளிநாட்டு பயிற்சி), ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை குழு இராணுவ தலைமையக சிரேஷ்ட பணிநிலை அதிகாரி (பணியாளர்), யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள் மற்றும் பயிற்சி) , 12 வது கள பொறியியல் படையணி (வலுவூட்டல்) கட்டளை அதிகாரி, 1 வது கள பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பணியாளர் பயிற்றுவிப்பாளர், இராணுவ தலைமையகத்தின் இராணுவ தளபதி செயலகத்தின் பதில் கேணல் (தளபதி செயலகம்), இராணுவ தலைமையகத்தின் பயிற்சி கட்டளை கேணல் (பொது பணிநிலை), இலங்கை இராணுவப் பயிற்சிக் கட்டளைத் தலைமையக பதில் கேணல் (வியூகம் மற்றும் கோட்பாடு) மற்றும் அதிகாரி தொழில் முகாமைத்துவ மையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மேலும், அவர் அதிகாரி தொழில் முகாமைத்துவ மையத்தின் பிரதி தளபதி (பதில்), 571 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பக பணிப்பாளர் நாயகம், 59 வது காலாட் படைப்பிரிவு தளபதி, பொறியியல் படைப்பிரிவு தளபதி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி, இலங்கை இராணுவ மருத்துவ படையணி படைத்தளபதி, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி. இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை பொறியியல் படையணி படைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன் அவர், 2018–2019 ஆம் ஆண்டுக்கான தேசியப் பாதுகாப்பு மற்றும் தேசிய தற்காப்புக் கொள்கைகளைத் திருத்துவதற்காகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு கொள்கைத் திட்டமிடல் பணிகள் குழுவின் உறுப்பினர், 2020-ஆம் ஆண்டில் கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மைய பிரிகேடியர் (திட்டமிடல்), ‘இலங்கை இராணுவத்தின் முன்னோக்கிய பாதை 2019–2020 மற்றும் 2020–2025’ என்பதை வகுப்பதற்கான சபை உறுப்பினர், முப்படைகளின் பாதுகாப்பு மீளாய்வு 2024–2030-க்காக, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட குழு தலைவர், ‘தரைப்படை பாதுகாப்பு மீளாய்வு 2024–2030’க்கான குழு தலைவர் மற்றும் ‘தரைப்படை பாதுகாப்பு மறுஆய்வு 2024–2030’-ஐ செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வழிநடத்தல் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு உத்தம சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அதிகாரி மேலும், கள பொறியியல் முதலாம் தர பாடநெறி, அடிப்படை புலனாய்வு பாடநெறி, கனிஷ்ட தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பாடநெறி, அதிகாரி படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி, காலாட் இள அதிகாரிகள் பாடநெறி, படையலகு கணக்கு அதிகாரிகள் பாடநெறிகள், கணினி அறிவியல் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாடநெறி, பாதுகாப்பு தூதர் அறிமுகப் பாடநெறி, அடிப்படை தீயணைப்பு மற்றும் மீட்பு பயிற்சி பாடநெறி மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி ஆகிய தொழின்முறை இராணுவப் பாடநெறிகளை வெற்றிகரமாக பயின்றுள்ளார்.

மேலும் பொறியியல் இளம் அதிகாரிகள் பாடநெறி பாகிஸ்தான், சமிக்ஞை படையணி அதிகாரிகள் பாடநெறி இந்தியா, இந்தியாவில் உள்ள ஒருங்கிணைந்த அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் பாடநெறி மற்றும் மலேசியாவில் உள்ள மலேசிய ஆயுதப் படைகளின் பணிநிலை கல்லூரிப் பாடநெறி ஆகிய வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.

மேலும் சிரேஷ்ட அதிகாரி இராணுவ பாடநெறிகளுக்கு மேலதிகமாக, களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வியல் முதுகலைப் பட்டம், மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் வியூக மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் டிப்ளோமா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கடற்படை முதுகலை பாடசாலை இருந்து பெற்ற பாதுகாப்பு ஆய்வுகள் (சிவில்- இராணுவ உறவுகள்) முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.