இராணுவ போர்க் கல்லூரியில் போர் வீரர்கள் செழுமைப்படுத்தும் டைனர்ஸ் கிளப் மற்றும் போர்க்கள ஆய்வு

இராணுவ போர் கல்லூரி, முல்லைத்தீவைக் கைப்பற்றியது குறித்த போர்க்கள அடிப்படையிலான ஒரு கள ஆய்வுடன், டைனர்ஸ் கிளப் அமர்வையும் ஒருங்கிணைத்து, 2026 மார்ச் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் தொழில்ரீதியாக வளமூட்டும் இரண்டு நாள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

இந்தத் திட்டம், சிரேஷ்ட கட்டளை பாடநெறி 16 மற்றும் கனிஷ்ட கட்டளை பாடநெறியின் 35-இன் மாணவ அதிகாரிகளுக்கு, ஆழ்ந்த சிந்தனை உரையாடலுக்கும் விரிவான செயல்பாட்டுப் பகுப்பாய்விற்கும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியது.

இந்த நிகழ்ச்சி 2026 மார்ச்25 அன்று, “முல்லைத்தீவு – தோல்வியிலிருந்து வெற்றிக்கு” என்ற கருப்பொருளிலான டைனர்ஸ் கிளப் அமர்வுடன் தொடங்கியது. இந்த அமர்வில் 166 மாணவ அதிகாரிகளும், பேராசிரியர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

59 வது காலாட் படைப்பிரிவின் முன்னாள் தளபதியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த அவர்கள் சிறப்புரையாற்றியதுடன் அவர் நெருக்கடியான சூழ்நிலைகளில் தலைமைத்துவம், செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் சிக்கலான நிலப்பரப்புகளில் உயர்-தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்த தனது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

2026 மார்ச் 26 அன்று, வடக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டதை மையமாகக் கொண்ட ஒரு துணி மாதிரி வரைப்பட கலந்துரையாடலுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது.

அந்த நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருந்த போர் வீரர்களின் பங்கேற்பு, அந்த நிகழ்ச்சியின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.

59 வது காலாட் படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த (ஓய்வு) மற்றும் வழங்கல் பிரிவு முன்னாள் கேணல் மேஜர் ஜெனரல் எச்.எம்.யு.பி. ஹெரத் (ஓய்வு) அவர்களும் இணைந்து, தங்களது போர்க்கள அனுபவங்களையும் தொழில்முறை நுண்ணறிவுகளையும் பகிர்ந்துகொண்டு அமர்வைச் செழுமைப்படுத்தினர்.