23rd March 2026
யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியின் வேண்டுகோளின்படி, யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாண தாதியர் பயிற்சிப் பாடசாலையில் இரத்த தான நிகழ்ச்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
வட மாகாணம் முழுவதிலுமுள்ள சுகாதார நிறுவனங்களில் நிலவும் கடுமையான இரத்த விநியோகப் பற்றாக்குறையைச் சீர்செய்யும் முதன்மை நோக்கத்துடன், இந்த முன்னெடுப்பு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம், 51 வது காலாட் படைப்பிரிவு, 512 வது காலாட் பிரிகேட் மற்றும் பலாலியிலுள்ள இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 22 பொதுமக்கள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி, அவருடன் 5 அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 சிப்பாய்கள் ஆகியோர் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்து இந்த திட்டத்திற்குப் பங்களித்தனர்.
இத்திட்டத்திற்கான மருத்துவ ஆதரவானது, பலாலி இராணுவச் வைத்தியசாலை, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து வழங்கப்பட்டது.