மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 13 வது ஆண்டு நிறைவு விழா

மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் தனது 13 வது ஆண்டு நிறைவை 2026 மார்ச் 14 ஆம் திகதி தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு விழா மத அனுஷ்டானங்கள் மற்றும் சமூக சேவை திட்டங்களுடன் ஆரம்பமாகியது. இதில் கதுருகொட ராஜமஹா விஹாரையின் புத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் மற்றும் பதுளை பொது மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் நடத்தப்பட்ட நன்கொடை திட்டம் ஆகியவை அடங்கும்.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே. ஏ. டபிள்யூ. என். எச். பண்டாரநாயக்க அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் படையினர், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையை வழங்கினர். தொடர்ந்து படையினருக்கு உரையாற்றிய தலைமையக தளபதி அனைத்து அதிகாரிகள், படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புகளைப் பாராட்டினார்.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், மரக்கன்று நாட்டப்பட்டதுடன் குழு படம் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரிடையே சிநேகபூர்வமான கரப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளும் நடாத்தப்பட்டன.

13வது ஆண்டு நிறைவு விழா அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துடன் நிறைவடைந்தது.