17th March 2026
மேஜர் ஜெனரல் சீஎஸ் திப்பொட்டுகே அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 17 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் சீஎஸ் திப்பொட்டுகே அவர்கள் 1991 நவம்பர் 22 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் பாடநெறி 09 இல் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்தார். ரத்மலான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1993 நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சிங்க படையணியில் பணியமர்த்தப்பட்டார்.
தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மார்ச் 22 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார்.
தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 10வது இலங்கை சிங்க படையணியின் குழு தளபதி, 10வது இலங்கை சிங்க படையணி பின் நிலை தலைமையகத்தின் அதிகாரி கட்டளை, 10வது இலங்கை சிங்க படையணி புலனாய்வு அதிகாரி, 10வது இலங்கை சிங்க படையணியின் வாகன போக்குவரத்து அதிகாரி மற்றும் 10வது இலங்கை சிங்க படையணி அதிகாரி கட்டளையாக பணியாற்றியுள்ளார்.
மேலும் அவர், 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணிநிலை அதிகாரி 3, இராணுவ நலன்புரி நிதிய அமைப்பின் வைப்பு உறுப்பினர் கிளையின் பொறுப்பு அதிகாரி, 3வது இலங்கை இராணுவ மருத்துவக் படையணியின் பணிநிலை அதிகாரி 2, இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, இலங்கை சிங்க படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 2 (சட்டம்), இலங்கை சிங்க படையணி தலைமையக நிறைவேற்று அதிகாரி மற்றும் 112 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் பிரிகேட் மேஜர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மேலும், அவர் கிழக்கு தலைமையக முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் பணிநிலை அதிகாரி 1, இராணுவத் தலைமையக உபகரண பணிப்பாளர் நாயக கிளையில் பணிநிலை அதிகாரி 1, 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் வழங்கல்), இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் லயா செயின் விடுதி மனித மனித வள பிரதானி, அலவ்வ ரணவிரு ஆடை தொழிற்சாலை எண் 02 தொழிற்சாலை முகாமையாளர், இராணுவத் தலைமையக போர்வீரர்கள் விவகார பணிப்பகத்தின் கேணல் (நலன்புரி), இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதி, அபிமான்சல 3 இன் தளபதி, இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாகப் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, வாகன போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி மற்றும் படையணி புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட தொழிற்துறை இராணுவப் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
அவர் சீனாவில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி பாடநெறி மற்றும் பங்காளதேசத்தில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்சி பாடநெறி உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பயிற்சி பாடநெறிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
தமது இராணுவத் தகுதிகளுக்கு மேலாக, சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாதுகாப்பு ஆய்வுகளில் இளங்கலைப் பட்டத்தையும், இலங்கை துணி மற்றும் ஆடை நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆடை உற்பத்தி முகமைத்துவ சான்றிதழையும் பெற்றுள்ளார்.