இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு இராணுவத்தால் மடிக்கணினி நன்கொடை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்திற்கிணங்க டிஜிட்டல் கற்றலுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகல் மூலம், இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் 2026 மார்ச் 13 அன்று இராணுவத் தலைமையகத்தில் மடிக்கணினி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதி இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட 79 மாணவர்களுக்கு ரூ. 212,000.00 பெறுமதியான மடிக்கணினிகளை அடையாளமாக வழங்கினர்.

நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.சீ.ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வை நலன்புரி பணிப்பகம் நடத்தியது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளி மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.