13th March 2026
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் இரண்டு நாள் தலைமைத்துவ மேம்பாட்டு பட்டறை 2026 மார்ச் 06 மற்றும் 07 ம் திகதிகளில் சீன-லங்கா நட்புறவு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள், பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தலைமைத்துவ தரநிலைகள், தொழில்முறை பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல புகழ்பெற்ற ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளால் தொடர்ச்சியான நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. மேஜர் ஜெனரல் எம்.டி.யு.வி. குணதிலக்க (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 'ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் தொழில்முறை நடத்தை' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.ஏ. கருணாசேகர (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ எம்எஸ்சீ அவர்கள் "அதிகாரிகளின் அடையாளம், மதிப்புகள் மற்றும் அதிகாரியின் பொருள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் மேலும் இராணுவத் தலைமையின் நெறிமுறை அடித்தளத்தை வலியுறுத்தினார். மேஜர் ஜெனரல் எம்.டி.யு.வி. குணதிலக்க (ஓய்வு) என்டியூ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்கள் எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதில் பயிற்றுவிப்பாளர்களின் பொறுப்பை எடுத்துரைத்து, "ஒரு தலைவராகவும் ஒரு முன்மாதிரியாகவும் அதிகாரி பயிற்றுவிப்பாளர்" என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடாத்தினார். இது எதிர்காலத் இராணுவத் தலைமையின் நெறிமுறை அடித்தளத்தை வலியுறுத்தியது. மேலும் பிரிகேடியர் ஜே.எம்.சீ. ஜயவீர (ஓய்வு) ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் "இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் சிறந்து விளங்குதல் - தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் கல்வியற் கல்லூரி சூழலில் செயற்திறன்" என்ற தலைப்பில் விரிவுரையின் தொடரை முடித்தார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் வளப்படுத்தும் வகையில், மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வீ.எம்.என்.டி.கே.பி. நியாங்கொட (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் "மதிப்பீட்டு, நியாயம் மற்றும் பயிற்றுவிப்பாளரின் தொழிற்துறை பொறுப்பு" என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார். இது இராணுவத் தலைமையின் நெறிமுறை அடித்தளத்தை வலியுறுத்தியது. மேஜர் ஜெனரல் எச்.சீ.பீ. குணதிலக்க (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் "ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் தொழிற்தூறை நடத்தை" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேஜர் ஜெனரல் யு.எல்.ஜே.எஸ். பெரேரா (ஓய்வு) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவப் பயிற்சியின் போது வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு "முகாமைத்துவ, வழிகாட்டுதல் மற்றும் மேம்பாடு அதிகாரி பயிலிளவல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த முயற்சியின் மேலும் விரிவாக்கமாக, கல்வியற் கல்லூரி அனைத்து மட்டங்களிலும் தலைமைத்துவக் கொள்கைகள் மற்றும் தொழில்முறை தரநிலைகள் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தனி இரண்டு நாள் பட்டறையும் நடாத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கெப்டன் வை.ஏ.எம்.டபிள்யூ ஜினதாச யாப்பா, எதிர்கால அதிகாரிகளை வளர்ப்பதிலும் கல்லூரியின் கலாசாரத்தை நிலைநிறுத்துவதிலும் பயிற்றுவிப்பாளர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தி, "இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிற்றுவிப்பாளரின் அடையாளம்" என்ற தலைப்பில் ஒரு அமர்வை வழிநடாத்தினார். விஷேட படையணியின் கெப்டன் ஆர்.எம் புஞ்சிபண்டா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் "ஒழுக்கம், பயிற்சி மற்றும் தரப்படுத்தல் சிறப்பு" பற்றி கலந்துரையாடினர். மேலும் நிலையான தரநிலைகள் மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதிகாரவாணையற்ற அதிகாரி 1 எஸ்.எஸ். செனரத் பண்டா "உடற்பயிற்சி தலைமைத்துவம் மற்றும் பாதுகாப்பு கலாசாரம்" என்பதை எடுத்துரைத்தார். இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி நடைமுறைகளுக்கு பங்களித்தது. அதிகாரவாணையற்ற அதிகாரி 1 கே.ஆர்.வீ செனவிரத்ன பயிற்றுவிப்பாளர் நடத்தை மற்றும் பயிலிளவல் முகாமைத்துவ திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 எல்.எச்.டி.டீ சரத் குமார யூஎஸ்பீ பயிலிளவல் செயற்திறனை மதிப்பிடுவதில் நியாயம் மற்றும் தரப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு அமர்வின் முடிவிலும், விருந்தினர் பேச்சாளர்களுக்கு அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளைப் பாராட்டி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி நினைவுப் பரிசில்களை வழங்கினார்.