இராணுவ நலன்புரி நிதி பணிப்பாக ஏற்பாட்டில் இலங்கை கவச வாகன படையணி மற்றும் 14வது காலாட் படைப்பிரிவில் விழிப்புணர்வு விரிவுரை

இராணுவ நலன்புரி நிதி பணிப்பகம் 2026 பெப்ரவரி 24 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்திலும் 2026 மார்ச் 03, அன்று 14வது காலாட் படைப்பிரிவிலும் விழிப்புணர்வு விரிவுரைகளை நடாத்தியது.

இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் கே.ஏ.டி.சீ.ஜே. கொடித்துவக்கு அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன், இராணுவ நலன்புரி நிதியத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்த விரிவான விளக்கக்காட்சியையும் வழங்கினார். விண்ணப்பங்களை அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய சரியான நடைமுறைகளையும் பணிப்பாளர் விளக்கினார், மேலும் செயலாக்கத்தில் தாமதங்களைத் தவிர்க்க சரியான நிர்வாக வழிகள் மூலம் முழுமையான மற்றும் துல்லியமான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விரிவுரைகளில் பங்கேற்றனர்.