59 வது வருடாந்த இராணுவ வீதி ஓட்ட போட்டி நிறைவு

தொடர்ச்சியாக 59 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (2026 மார்ச் 08) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.

சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்தப் போட்டி, காலை 6.00 மணிக்கு பத்தரமுல்லையில் இருந்து ஆரம்பமாகி, பனாகொட இராணுவ வளாகத்திலுள்ள இராணுவ உடற்பயிற்சி கூடத்திற்கு அருகில் நிறைவடைந்தது. இப்போட்டியானது, தியத்தஉயன, பத்தரமுல்ல, மாலபே, அதுருகிரிய மற்றும் ஹபரகட ஊடாக சென்று வெற்றிக்கோட்டினை அடையும்.

இந்தப் போட்டியில் 19 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 133 விளையாட்டு வீர வீராங்கனைகள் (109 ஆண்கள் மற்றும் 24 பெண்கள்) பங்கேற்றனர். இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களும் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

வீதி ஓட்ட போட்டியில் சாதனை படைத்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு;

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்

(ஆண்கள் பிரிவு) - இலங்கை பீரங்கிப் படையணி

(பெண்கள் பிரிவு) – இலங்கை சமிக்ஞை படையணி

ஆண்கள் பிரிவு

முதலாம் இடம் - இலங்கை பீரங்கிப் படையணியின் கன்னர் எம்.எஸ்.ஏ. பெர்னாண்டோ

இரண்டாம் இடம் - இலங்கை பீரங்கிப் படையணியின் சார்ஜன் கே. சம்முகேஸ்வரன்

மூன்றாம் இடம் - இலங்கை சிங்கப் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.ஜி.வி.டி. காரியவசம்

பெண்கள் பிரிவு

முதலாம் இடம் - இலங்கை சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.எம்.என். நிதர்ஷனி

இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.எல்.எஸ்.டி. லியனகே

மூன்றாம் இடம் - இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பெண் சிப்பாய் பி.ஐ.எம். செவ்வந்தி