7th March 2026
“தூய இலங்கை” திட்டத்திற்கு இணங்க, 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர், நானாட்டான் சுகாதார அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து, 2026 மார்ச் 04 ஆம் திகதி மன்னார், மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பல் மருத்துவம் மற்றும் தொற்றா நோய் மருத்துவம் போன்ற மருத்துவ முகாமை நடாத்தினர்.
இந்த மருத்துவ முகாமை மன்னார் பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தின் மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ். ஜூட் ரவி பச்செல் நடாத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 220 மாணவர்களுக்கு பல் விழிப்புணர்வு நிகழ்சி மற்றும் பரிசோதனைகள் வழங்கப்பட்டன. மேலும், 16 ஆசிரியர்கள் மற்றும் 60 பெற்றோர்கள் தொற்றா நோய்கள் மருத்துவ முகாமில் பங்கேற்றனர். அங்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த சோதனைகள் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடாத்தப்பட்டன. மேலும் ஆபத்தில் உள்ளவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.