ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.என்.டி. கருணபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் கே.என்.டி. கருணபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், 1989 ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி 33 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1991 ஜூன் 15 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் பணியமர்த்தப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 செப்டம்பர் 30 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மார்ச் 06 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார்.

தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 8வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குழு தளபதி, 8வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, 213 காலாட் பிரிகேட் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 3 (வழங்கல்), 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி நிலையத்தின் பணிநிலை அதிகாரி 2, ஹைட்டி ஐ.நா அமைதி காக்கும் இலங்கை படை குழுவிகன் அதிகாரி கட்டளை, 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 6 வது அதிரடிப் படை தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 611 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி மற்றும் 25 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியவை ஆகும்.

மேலும் அவர் இராணுவத் தலைமையகத்தில் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), கொழும்பு அனைத்து செயற்பாட்டு கட்டளை தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் (பொதுப் பணிநிலை), 552 வது காலாட் பிரிகேட் தளபதி, 612 வது காலாட் பிரிகேட் தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் (பொது பணிநிலை), இராணுவத் தலைமையக முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அதிகாரி, படையலகு ஆதரவு ஆயுதப் பயிற்சி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளின் தந்திரோபாயப் பயிற்சி, இந்தியாவில் அதிகாரிகளுக்கான மோட்டார் பயிற்சி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பயிற்சி, பங்களாதேஷில் படையணி கட்டளை மற்றும் பணிநிலை பயிற்சி மற்றும் பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பயிற்சி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை பயின்றுள்ளார்.

இராணுவத் தகுதிகளுக்கு மேலதிகமாக, இலங்கையின் ஓரியண்ட் கல்லூரியில் கணினி வன்பொருள் பொறியியல் டிப்ளோமா, 2011 இல் இலங்கை அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஆலோசனை டிப்ளோமா, கொழும்பு அக்வினாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் உணவக முகாமைத்துவ டிப்ளோமா, இலங்கையின் ஐரோப்பிய தொழிற்துறை கல்வி நிறுவனம் (தனியார்) நடத்திய மனிதவள முகாமைத்துவத்தில் தொழிற்துறை முகாமைத்துவ டிப்ளோமா நிலை II, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு முகாமைத்துவம் மற்றும் போர் ஆய்வுகளில் டிப்ளோமா, இலங்கையின் சிப்வே ஆங்கில கல்லூரியில் ஆங்கில அடிப்படை பாடநெறி, இலங்கையின் மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகள் குறித்த டிப்ளோமா பாடநெறி மற்றும் இலங்கை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் பொது தகவல் தொழில்நுட்ப திறன் பாடநெறி ஆகியவற்றையும் பயின்றுள்ளார்.