இராணுவப் போர்க் கல்லூரியின் மூன்றாவது முகாமைத்துவ குழுக் கூட்டம்

இராணுவப் போர் கல்லூரி தனது 3வது நிர்வாகக் குழு கூட்டத்தை 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி புத்தல வளாகத்தில் கூட்டியது. இந்தக் கூட்டத்திற்கு இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்தக் கூட்டம், உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கு வழி வகுத்தது.

கூட்டத்திற்கு முன்னதாக, பதவி நிலைப் பிரதானி கனிஷ்ட கட்டளைப் பயிற்சி பாடநெறி மற்றும் சிரேஷ்ட கட்டளைப் பயிற்சி பாடநெறியின் மாணவ அதிகாரிகளுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையின் போது, தலைமைத்துவத்தின் அத்தியாவசிய குணங்களை எடுத்துரைத்தார் மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது இலங்கை இராணுவத்தின் எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கிறது. அவரது சிந்தனையைத் தூண்டும் உரையைத் தொடர்ந்து, அவரது தனிப்பட்ட புத்தகத் தொகுப்பை கல்லூரி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இது மாணவர் அதிகாரிகளின் கல்வித் துறையை மேலும் வளப்படுத்தும் ஒரு செயலாகும்.

முகாமைத்துவ குழுக் கூட்டத்தில், பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர், வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர், பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர், பயிற்சி பணிப்பகத்திக் கேணல் பயிற்சி மற்றும் இராணுவப் போர்க் கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட கூட்டு நிபுணத்துவம் மற்றும் நுண்ணறிவுகள், இராணுவக் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

வருகை தந்த பதவி நிலைப் பிரதானிக்கு, வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், குழுப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தளபதி மற்றும் இராணுவப் போர்க் கல்லூரி ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், இந்திய-இலங்கை நட்புறவு விளையாட்டு வளாகத்தின் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைக் குழு ஆய்வு செய்தது.

நிகழ்ச்சியின் முடிவில், இராணுவப் போர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என். சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பதவி நிலைப் பிரதானிக்கு, அவர் கூட்டத்திற்கு ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பையும், நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் பாராட்டி, நினைவுப் பதாகையை வழங்கினார்.