3rd March 2026
தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1993 ஜனவரி 04 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி 39 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1994 ஏப்ரல் 09 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவச வாகன படையணியில் நியமிக்கப்பட்டார்.
தனது பணிக்காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2026 ஜனவரி 26 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மார்ச் 09 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.
அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணியின் பிராவோ பிரிவின் குழு தளபதி, இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணியின் தொழில்நுட்ப பிரதி தளபதி, இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணியின் உதவி நிறைவேற்று அதிகாரி, இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணியின் நிறைவேற்று அதிகாரி, இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணியின் பிராவோ பிரிவின் பதில் அதிகாரி கட்டளை, இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணியின் பிரிவின் இரண்டம் கட்டளை அதிகாரி, இலங்கை கவச வாகன படையணி 5 வது புலனாய்வு படையணி அல்பா பிரிவின் அதிகாரி கட்டளை, பிராவோ படைப்பிரிவு, இலங்கை கவச வாகன படையணி 1 வது புலனாய்வு படையணி மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் டெல்டா பிரிவின் அதிகாரி கட்டளையாக பணியாற்றினார்.
இலங்கை கவச வாகன படையணியின் தலைமையத்தின் பணிநிலை அதிகாரி 1 (வழங்கல்), இலங்கை கவச வாகன படையணி 8 வது (வலுவூட்டல்) படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1, 55 வது காலாட் படைப்பிரிவின் பொது பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 55 வது காலாட் படைப்பிரிவின் பொது பணிநிலை அதிகாரி 1 (நடவடிக்கை), 55 வது காலாட் படைப் பிரிவு தலைமையக கேணல் (ஒருங்கிணைப்பு), 22 காலாட் படைப்பிரிவு தலைமையக கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), 62 காலாட் படைப்பிரிவு தலைமையக கேணல் (பொது பணிநிலை), கவச வாகன படையணி பயிற்சி நிலைய தளபதி, 241 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் இராணுவத் தலைமையக தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகின்றார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
காலாட் படை இளம் அதிகாரிகள் பாடநெறி, பிரிவு நிர்வாக பாடநெறி, கவச இளம் அதிகாரிகள் பாடநெறி, பிரிவு கணக்கு அதிகாரிகள் பாடநெறி, மேம்பட்ட பிரிவு கணக்குகள் பாடநெறி, பிரிவு புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி, கனிஷ்ட பணி நிலை பாடநெறி, சாத்தியமான இராணுவ பார்வையாளர்கள் மற்றும் பணி நிலை அதிகாரிகள் பாடநெறி மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுமக்கள் பாதுகாப்பு பாடநெறி உள்ளிட்ட பல தொழில்முறை இராணுவ பாடநெறிகளை சிரேஷ்ட அதிகாரி வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
பாகிஸ்தான் கவசப் படை இளம் அதிகாரிகள் அடிப்படைப் பாடநெறி, இந்தியா ஆயுதப் பயிற்றுவிப்பாளர் அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தான் நடுநிலை தொழில் பாடநெறியுடன் இணைக்கப்பட்ட கனிஷ்ட பணிநிலைபாடநெறி, இந்தியா போர் குழு கட்டளை பாடநெறி மற்றும் இந்தியா போர் குழு கட்டளை பாடநெறி உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பட்ட படிப்புகளையும் பயின்றுள்ளார்.