3rd March 2026
இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கமைய, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் முதலாம் படை படையினரால் 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இலங்கை இராணுவத்தின் 77 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “நெலும் பியச” கேட்போர்கூடத்தில் “கோர்ப்ஸ் கிரியேட்டர்ஸ் எக்ஸ்போ” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு புத்தாக்க போட்டி நடத்தப்பட்டது.
முதலாம் படை தளபதியும் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
முதலாம் படை தலைமையகம், 53 மற்றும் 58 வது காலாட் படைப்பிரிவுகள், காலாட் பிரிகேட் மற்றும் அவற்றின் கீழ் உள்ள படையலகுகள் மற்றும் முதலாம் படையின் கீழ் இணைக்கப்பட்ட படையலகுகளால் மொத்தம் 53 புத்தாக்கங்கள் கட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வின் போது, புதுமையான பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இறுதிச் சுற்றில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பின்வருமாறு பெறப்பட்டன:
* முதல் இடம் - இரண்டாம் லெப்டினன் ஈ.எம்.என்.எம்.ஆர். எதிரிசிங்க - 6வது விஜயபாகு காலாட் படையணி (சென்ட்ரி எக்ஸ் உபகரணங்கள்)
* இரண்டாம் இடம் - இரண்டாம் லெப்டினன் ஈ.எம்.என்.எம்.ஆர். எதிரிசிங்க - 6வது விஜயபாகு காலாட் படையணி (அகுவா எங்கள் உபகரணங்கள்)
* மூன்றாம் இடம் - சாஜன்ட் டி.எம்.எஸ்.டி. திசாநாயக்க - 8வது கள படைப்பிரிவு இலங்கை பீரங்கிப் படையணி (தானியங்கி மல்டிபங்க்ஷன் சாதனம்)
ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.டி.ஜே.சி. பிரேமதிலக யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட ஆராய்ச்சி, பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் வைஎஸ்பீ சுமனசிங்க ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.