26th February 2026
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 24 அன்று களனிமுல்லை 2வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் கட்டுநாயக்க 2வது இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார்.
2வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு வருகை தந்த இராணுவ தளபதியை, கட்டளை அதிகாரி மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு, நிகழ்வின் நினைவாக அவர் ஒரு மரக்கன்றை நாட்டினார். பின்னர் குழு படம் எடுத்துகொண்டதுடன் கட்டளை அதிகாரியின் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், படையினரிடையே உரையாற்றிய தளபதி, தொழில்முறை சிறப்பின் மூலக்கல்லாக சுய உணர்தலை வலியுறுத்தினார். இராணுவ நடவடிக்கைகள் மற்றும் சிவில் ஈடுபாடுகள் இரண்டிலும் முக்கிய செயல்திறனை உறுதி செய்வதற்காக அனைத்து பணியாளர்களும் தங்கள் அடையாளம், பணி மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களை தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர், தளபதிக்கு ஒரு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் முகாம் வளாகத்தை சுற்றி ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், அவர் 2வது இலங்கை இராணுவ சேவைப் படையணிக்கு விஜயம் செய்தார். அவரை கட்டளை அதிகாரி மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. குழு படம் எடுத்து கொண்டதை தொடர்ந்து, கட்டளை அதிகாரி தற்போதைய நிர்வாக நடைமுறைகள் மற்றும் படையணியின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து தளபதிக்கு விளக்கினார். படையினருக்கு உரையாற்றிய தளபதி, படையணியின் வளர்ச்சிக்கான மூலோபாய வழிகாட்டுதல்கள் மற்றும் அமைப்பில் அதன் பரந்த தாக்கத்தை கோடிட்டுக் காட்டினார். நல்ல நடத்தையைப் பேணுதல் மற்றும் பிரச்சனையற்ற பணிச்சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
பின்னர், தளபதி முகாம் வளாகத்தை ஆய்வு செய்து அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துகளை பதிவிட்டார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அவருக்கு ஒரு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.