தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் - 2025 போட்டி நிறைவு

62வது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் – 2025 போட்டி 2026 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 01, வரை டொரிங்டன் விளையாட்டு அபிவிருத்தி உள்ளக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள 65 விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் உள்ளடக்கி மொத்தம் 21 எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 17 தனிநபர் எடைப் பிரிவுகள், ஒரு குழு (அணி) நிகழ்வு மற்றும் திறந்த பிரிவு போட்டிகளும் இடம்பெற்றன.

ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்ஷிப்பை இலங்கை விமானப்படை கைப்பற்றியது. அவர்கள் ஆறு தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அதே நேரத்தில் இலங்கை இராணுவ ஆண்கள் பிரிவு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அவர்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பெண்கள் இரண்டாம் இடத்தை இலங்கை விமானப்படை பெற்றது. பெண்கள் இரண்டாம் இடத்தை இலங்கை விமானப்படை பெற்றது. திறந்த மகளிர் பிரிவில், இலங்கை இராணுவம் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகவும் பெருமைக்குரிய சாதனையாகவும் அமைந்தது.

சாம்பியன்ஷிப்பின் சிறந்த பெண் வீராங்கனைக்கான விருதை இலங்கை இராணுவத்தின் கோப்ரல் டபிள்யூ.எல்.ஏ.எச். இமேஷாவும், சாம்பியன்ஷிப்பின் சிறந்த எறிதலுக்கான விருதை லான்ஸ் கோப்ரல் எச்.ஜி.எஸ்.எல்.எம். ஹதுருசிங்கவும் பெற்றனர்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ இலங்கை போர் கருவி படையணியின் படைத் தளபதியும் இராணுவ ஜூடோ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் கலந்துகொண்டார்.