23rd February 2026
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெற்ற ‘மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி - 2026’ தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தொழில்முறை அறிவு, தலைமைத்துவ குணங்கள், நேர்மறையான அணுகுமுறைகள், குழு மனப்பான்மை மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் போட்டி, எட்டு கட்டங்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட நாக் அவுட் வடிவத்தில், 2026 மே மாதம் இறுதி வரை, இலங்கை இராணுவத்தின் அனைத்து நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் பங்கேற்புடன், இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடாத்தப்படும்.
‘மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி - 2026’ இன் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், போட்டியின் தொடக்கச் சுற்றில் அணிகள் போட்டியிட்டன. இன்றைய நிகழ்வுகளின் முடிவில், இராணுவத் தளபதி பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கியதுடன், வெற்றி பெற்ற அணிக்கு அவர்களின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்பை முடித்த அணிகளைப் பாராட்டினார்.