23rd February 2026
ஆசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 வது ஆசிய உள்ளக தடகள சாம்பியன்ஷிப் – 2026, சீனாவின் தியான்ஜினில் பெப்ரவரி 06 முதல் 08 வரை நடைபெற்றது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ தடகள அணியின் விளையாட்டு வீரர்கள் பின்வரும் செயல்திறனை காண்பித்தனர்:
ஆசிய உள்ளக தடகள சாம்பியன்ஷிப் 3000 மீட்டர் ஓட்டத்தில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் டப்ளியூ.ஏ.எம்.ஆர். விஜேசூரிய 6 வது இடத்தைப் பிடித்து புதிய தேசிய உள்ளக சாதனையைப் படைத்தார்.
2 வது (தொ) இலங்கை இராணுவ சேவை படையணியின் கோப்ரல் கே.ஏ.பீ. மல்ஷான் முப்பாய்ச்சல் போட்டியில் 5 வது இடத்தை பிடித்ததுடன் மேலும் ஆசிய உள்ளக தடகள சாம்பியன்ஷிப்பில் புதிய தேசிய உள்ளக சாதனையைப் படைத்தார்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தடகள குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பீ.ஜீ.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் விளையாட்டு வீரர்களை மேற்பார்வையிட்டார்.
புகைப்பட உபயம்: இலங்கை தடகளம்