20th February 2026
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 20 அன்று கொத்மலையில் உள்ள கூட்டு சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு இராணுவ மரபுகளுக்கமைய மரியாதை வழங்கப்பட்டதுடன் நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஈ.என்.குலசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.
இவ் விழாவின் போது, தமிழ் மொழிப் பாடநெறி எண். 107, ஆங்கில மொழிப் பாடநெறி எண். 20 மற்றும் பிரெஞ்சு மொழிப் பாடநெறி எண். 17 ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில், பிரதம விருந்தினர் பாடநெறி பங்கேற்பாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.