9th February 2026
562 மற்றும் 563 வது காலாட் பிரிகேட் படையினர், ஸ்பிரிட் ஒப் கிவிங் அமைப்புடன் இணைந்து தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடை வழங்கும் திட்டம் 2026 பெப்ரவரி 05, அன்று வவுனியா ராஜேந்திரகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் வவுனியா மகாகச்சகுடிய அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் முன்னெடுத்தனர்.
56வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.யு.ஏ சோளங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வு ஸ்பிரிட் ஒப் கிவிங் அமைப்பின் தலைவர் திருமதி ரோஸி துரிங் அவர்களின் நிதியுதவியுடன், திரு. சிசில் ரோச் மற்றும் திரு. சவந்த சேரம் ஆகியோரின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வின் போது, தமிழ் கலவன் பாடசாலையின் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான 57 மாணவர்களும், சிங்கள கலவன் பாடசாலையின் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான 75 மாணவர்களும் புத்தகப் பொதிகள் மற்றும் எழுதுபொருட்களைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.