இராணுவத்தினரால் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிரமதான பணி

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் 2026 பெப்ரவரி 03 ஆம் திகதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியர் பிரதீப் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சமூக நலத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள், சிப்பாய்கள், மகாவலி 'பி' மண்டல குடியிருப்பு முகாமைத்துவ பிரதான அலுவலகத்தின் பிரதிநிதிகள், வெலிகந்த வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.