78வது சுதந்திர தினத்தன்று 9158 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு

2026 பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I நிலைக்கு 260 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலைக்கு 1211 பணிநிலை சார்ஜென்களும், பணிநிலை சார்ஜென் நிலைக்கு 1704 சார்ஜென்களும், 2339 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 2204 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 1440 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணிகளில் இருந்து நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன.