3rd February 2026
அபிமன்சல 2 நல விடுதியின் தளபதி பிரிகேடியர் ஜீ.ஜீ.ஆர். மத்துகொட யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல 2 நல விடுதியின் பல்நோக்கு மண்டபத்தில் 2026 ஜனவரி 18 ஆம் திகதி ஒரு தர்ம பிரசங்கம் நடாத்தப்பட்டது.
இந்தப் பிரசங்கத்தை வண. கன்னோருவ சிறிதம்ம தேரர் நிகழ்த்தினார். அவர் நல விடுதியிலுள்ளவர்கள் மற்றும் ஊழியர்களுடன் தார்மீக விழுமியங்கள் மற்றும் மனநிறைவை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் சொற்பொழிவை நிகழ்த்தினார்.